Friday, 15 April 2011

கனவு

கனவு காண் இளைஞனே
கனவு கண்டால் மட்டும் போதுமா?!...

உழைப்பால் உன் கனவுக்கு உயிர் கொடு
பொறுமை புன்னகையால் உன் கனவுக்கு வண்ணம் தீட்டு
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் தடைகளை தகர்த்தெரி
நேர்மையால் உன் கனவை மெருகேற்று
வெற்றி கனி உன் கையில் கிடைக்கும் தருணம்
வண்ணமயமான வாழ்க்கை
அந்த கடவுளால் உனக்கு பரிசளிக்கப்படும்

Saturday, 9 April 2011

மனசாட்சி

மனிதனின் நிஜ முகத்தை
அவனுக்கு மட்டுமே பிரதிபலிக்கும்
ஒரே கண்ணாடி அவன் மனசாட்சி மட்டுமே...

Friday, 8 April 2011

இலவசம்

 அன்று சொன்ன வாக்கியம்
இன்று நாம் சிந்திக்க வேண்டியது....



ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.

ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-

அறிஞர் பெருமக்களே!
உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்"

அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம்,

" ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர்.

மனம் மிக மகிழ்ந்த ராஜா, "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.
அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.

ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன் ,
"அரசர ்பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறி தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.
ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, "உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

மகிழ்ந்து போன ராஜா மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.

"ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா! இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா," ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன?" என்றார்.

அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார். "இதை.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே! இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்று மகிந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான்.

அந்த வாசகம் என்ன தெரியுமா?

"இலவசமாக உணவு கிடைக்காது" (There is no free lunch)

என்பது தான் அந்த வாசகம்!

ஆனால் இன்று எல்லாமே இலவசம்
மனிதனுக்கு தன் வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் கிடைத்தால் அவன் மனம் உழைப்பில் நாட்டம் செலுத்தாது. 
இன்று உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசம்.
பின் நம் நாடு எப்படி முன்னேறும்?

இலவசம் என்ற சொல்லை தூக்கி போடு
இலவசம் நம் நாட்டை நாசமாக்கும் ஒரு ஒட்டுண்ணி
அதை களை எடுத்து நம் நாட்டை செழிப்பாக்குவோம்....

Thursday, 7 April 2011

வியாபாரம்

திருமணம் என்னும் வியாபாரத்தில்
ஆண் விலை பேசப்பட்டு
பெண் விற்க்கப்படுகிறாள்...

ஒரு உண்மையான மனிதன் தன்னையே விற்ப்பதில்லை
நீ மனிதனா சிந்தித்துப் பார்......

Tuesday, 5 April 2011

பரிசு

அர்த்தமில்லாத எதிர்பார்ப்புகளின் பரிசு
ஏமாற்றம் மட்டுமே

தாய்மை

நீ உதைக்கும் வலியை கூட
ஆனந்த கண்ணீருடன் ரசிக்கும் ஒரே ஜீவன்
உன் தாய் அவள்  கருவரையில்...